Wednesday, October 31, 2007

உன் ஞாபகம்.





கண்ணுறங்க முடியவில்லை
கண்மணி உன் ஞாபகம்
கடல் கடக்கவும் முடியவில்லை
கல்க்கண்டே உன் ஞாபகம்

கவிதை கூட எழுதமுடியவில்லை
காவியமே உன் ஞாபகம்
கடவுளையும் தேடமுடியவில்லை
காரிகையே உன் ஞாபகம்

சிந்தனை ஒரு நிலையில்லை
சித்திரமே உன் ஞாபகம்
சிகரமும் ஏறமுடியவில்லை
சீமாட்டியே உன் ஞாபகம்

பசிக்கின்றது உண்ணமுடியவில்லை
பைங்கிளியே உன் ஞாபகம்
பட்டணமும் பார்க்கமுடியவில்லை
பைந்தமிழே உன் ஞாபகம்


தேவைகள் எதுவுமில்லை
தேவதையே உன் ஞாபகம்
தேடியும் எதுவும் கிடைக்கவில்லை
தேவியே உன் ஞாபகம்

வாசனைகளை உணரமுடியவில்லை
வஞ்சியே உன் ஞாபகம்
வடக்கேது தெற்கேது தெரியவில்லை
வட்டநிலவே உந்தன் ஞாபகம்

Wednesday, October 17, 2007

நான் அங்கு நலந்தானா?




முகம் பார்த்து பல யுகங்கள்
குரல் கேட்டும் பல கணங்கள்
ஆனாலும்.......
தினமும் பார்த்து பேசிக் கொள்கின்றேன்!
நான் அங்கு நலந்தானா?
********* ********** ******
கண்ணிமைகள் துடிக்க,
படுக்கையறை செல்கின்றேன்
தூக்கம் தான் ஏனோ வரவில்லை
ஆனாலும்.........
கலர் கனவுகள் பல காண்கின்றேன்!
நான் அங்கு நலந்தானா?

******* ********** ********
உயிர் வாழ்வதற்காக உண்கின்றேன்
பிறர் மனம் நோகமல் சிரிக்கின்றேன்
ஆனாலும்.......
நான் இங்கு இல்லாததால்
தினம் தினம் இறக்கிறேன்!
நான் அங்கு நலந்தானா?