Saturday, May 27, 2006

இன்பப் போரிது.



போர்க்கலத்தில் நான் கண்ட
வாள் முனைதனை ஞாபகம் கொள்ளச்
செய்ததடி பள்ளியறையில்

உன் மார்முனைகள்

வாள் முனைக்குக்கும் உன் மார்முனைக்கும்
புறமுதுகு காட்டா வீரன் நானடி
எதிரியே வா! மோதிப் பார்ப்போம்
ஜெயிப்பது நீயா அல்லது நானா?


இங்கே போர் மரவுகளில்
மாற்றங்கள் பல உள்ளன........
கத்தியும் இல்லை ரத்தமும் இல்லை
யுத்தம் மட்டும் இங்குண்டு!


போர் ஆயுதங்களைக் கையாண்டதினால்
நான் வீரனுமில்லை
அடுப்படி வாசம் கொண்டதனால்
நீ கோலையுமில்லை!


இங்கே தோற்றவர் வெற்றி பெற்றவர் என்றும்
வெற்றி பெற்றவர் தோற்றவர் என்று அர்த்தம்!
என்னை வென்று நீ தோற்பாயா
உனை வென்று நான் தோற்பேனா?

இங்கே எவர் வென்றாலும்
இன்பம் பேரின்பம்
தோல்வி இல்லாதா போர் இது
காமன் நடாத்தும் இன்பப் போரிது.

Monday, May 01, 2006

வரைபடத்தில் ஓர் பாடம்!




உலக வரைபடமே
உனக்கு நல்ல
பாடம் சொல்கின்றது
கேட்டுப் பார்ப்போமா?

மழைத்துளி தானே
என்று எளிதாக எண்ணிவிடாதே
பங்களாதேஷ் நினைவில்
இருக்கட்டும்!

வெள்ளை ஐஸில் துள்ளி
விளையாடலாம் என்றால்,....
அவதானம்
அங்கே அலாஸ்கா!

சூரிய சூடு உடலுக்கு
சுகம் தரும் என்றாய்
சகாரா பாலைவனம்
நினைவிருக்கட்டும்

எங்களை யார் பிரிக்க முடியும்
என்ற மமதையில் இருந்த
கண்டங்களையே பிரித்து விட்டது
அன்றைய பூகம்பங்கள்!

பச்சை மலைகள்
என்று எண்ணி.....
காதல் கொண்டு விடாதே
அதன் அடியில் எரிமைலைகள்

உலக வரைபடமே உனக்கு
நல்ல பாடம் சொல்கின்றது.