Monday, October 30, 2006

நீதானா நீதானா!!!!




நீயா இன்று எனை
விட்டுச் சென்றாய்?

அன்று சூரிய உதயமும்
நிலவின் அடியெடுப்பும்
எம் உறவில் தானே
ஆரம்பம்!

இரவும் பகலும்
இணைவது எம்
உறவால் தானே
கண்மணியே!

கடிகார முள் கூட
நகராமல் இருந்திருக்கும்
காதலியே உனை நினையாமல்
நானிருந்ததில்யே!

இன்று சூரியகிரகனம்
சந்திரகிரகனம்
ஒன்றாய் வந்தது
என் வானில்!

இதற்கு என்ன கிரகனம்
என்று சொல்லியழைக்க?
பெயர் தெரியாததால்
வைத்தேன் என் பெயரை!


உ(எ)ன்னால் எனக்கிங்கே
இன்னல்கள் பல
சத்தியம் மீறியதால் வந்ததா?
இல்லை விதி தானோ இவை
எல்லாம்!


நீயா இன்று என்னை
விட்டுச் சென்றாய்?

Labels:

Thursday, October 26, 2006

உயிர் கொள்ளி!



நினைக்காத வேலையில்
நீயும் வந்தாய்
இன்று என்னை நினைக்க வைத்து
நீயும் சென்றாய்!

பாதகி நீயும் மறந்ததென்ன
பாவி மனம் பதைக்குதடி
மோகம் கொண்ட முகில்
திசை மாறியதென்ன

மீட்டிய பிடில் இன்று
தீ பற்றி எறியுதடி
அ(ணை)னைக்கும் கரமின்றி
உயிர் இங்கே வேகுதடி

உனை நினைந்து வளர்வதா?
இல்லை
மகனை நினைந்து தேய்வதா?
விடையின்றி நானிங்கே!

பலவும் தெரியும் எனக்கென்று
பகல் கனவு கண்டேன் பல
பூஜியம் நீயென
உரைக்காமல் கூறிச் சென்றாய்

விதைபயிரின் மேலேறி
நிலவில் விவாசாயம்
செய்வதாய்
கூறுகின்றாய்

உன் தோட்டத்திலும்
மூன்று பயிர்கள் இருப்பதை
ஏன் மறந்தாய்
நீயும் விவசாயி தானா?

மறக்க முடியாமல்
என்றோ நான் மறந்த
உயிர் கொள்ளி இன்று

என் விரல்களின் இடையே!

Labels: