இன்பப் போரிது.

போர்க்கலத்தில் நான் கண்ட
வாள் முனைதனை ஞாபகம் கொள்ளச்
செய்ததடி பள்ளியறையில்
உன் மார்முனைகள்
வாள் முனைக்குக்கும் உன் மார்முனைக்கும்
புறமுதுகு காட்டா வீரன் நானடி
எதிரியே வா! மோதிப் பார்ப்போம்
ஜெயிப்பது நீயா அல்லது நானா?
இங்கே போர் மரவுகளில்
மாற்றங்கள் பல உள்ளன........
கத்தியும் இல்லை ரத்தமும் இல்லை
யுத்தம் மட்டும் இங்குண்டு!
போர் ஆயுதங்களைக் கையாண்டதினால்
நான் வீரனுமில்லை
அடுப்படி வாசம் கொண்டதனால்
நீ கோலையுமில்லை!
இங்கே தோற்றவர் வெற்றி பெற்றவர் என்றும்
வெற்றி பெற்றவர் தோற்றவர் என்று அர்த்தம்!
என்னை வென்று நீ தோற்பாயா
உனை வென்று நான் தோற்பேனா?
இங்கே எவர் வென்றாலும்
இன்பம் பேரின்பம்
தோல்வி இல்லாதா போர் இது
காமன் நடாத்தும் இன்பப் போரிது.
2 Comments:
என்ன றெனி,பாரீஸ்ல இப்போ குளிர்காலமா?காதல் பொங்குது?????.
நன்றி ராஜா.
இப்போது குளிர் காலம் கிடையாது. ஆனாலும், மரங்கள் துளிர்விட்டு பூக்கள் பூத்துக் குழுங்கும் அழகை காண கண்கள் பல கோடி தேவை.
உண்மையில் நான் வர்ணித்தது பரிஸின் அழகை தான் நம்புங்கோ.
Post a Comment
<< Home