Wednesday, October 31, 2007

உன் ஞாபகம்.





கண்ணுறங்க முடியவில்லை
கண்மணி உன் ஞாபகம்
கடல் கடக்கவும் முடியவில்லை
கல்க்கண்டே உன் ஞாபகம்

கவிதை கூட எழுதமுடியவில்லை
காவியமே உன் ஞாபகம்
கடவுளையும் தேடமுடியவில்லை
காரிகையே உன் ஞாபகம்

சிந்தனை ஒரு நிலையில்லை
சித்திரமே உன் ஞாபகம்
சிகரமும் ஏறமுடியவில்லை
சீமாட்டியே உன் ஞாபகம்

பசிக்கின்றது உண்ணமுடியவில்லை
பைங்கிளியே உன் ஞாபகம்
பட்டணமும் பார்க்கமுடியவில்லை
பைந்தமிழே உன் ஞாபகம்


தேவைகள் எதுவுமில்லை
தேவதையே உன் ஞாபகம்
தேடியும் எதுவும் கிடைக்கவில்லை
தேவியே உன் ஞாபகம்

வாசனைகளை உணரமுடியவில்லை
வஞ்சியே உன் ஞாபகம்
வடக்கேது தெற்கேது தெரியவில்லை
வட்டநிலவே உந்தன் ஞாபகம்

Wednesday, October 17, 2007

நான் அங்கு நலந்தானா?




முகம் பார்த்து பல யுகங்கள்
குரல் கேட்டும் பல கணங்கள்
ஆனாலும்.......
தினமும் பார்த்து பேசிக் கொள்கின்றேன்!
நான் அங்கு நலந்தானா?
********* ********** ******
கண்ணிமைகள் துடிக்க,
படுக்கையறை செல்கின்றேன்
தூக்கம் தான் ஏனோ வரவில்லை
ஆனாலும்.........
கலர் கனவுகள் பல காண்கின்றேன்!
நான் அங்கு நலந்தானா?

******* ********** ********
உயிர் வாழ்வதற்காக உண்கின்றேன்
பிறர் மனம் நோகமல் சிரிக்கின்றேன்
ஆனாலும்.......
நான் இங்கு இல்லாததால்
தினம் தினம் இறக்கிறேன்!
நான் அங்கு நலந்தானா?

Monday, July 09, 2007

மீண்டுவா எனை மீட்டவா.


உ(எ)ன் கரம் கொண்டு
எ(உ)ன் மேனி தீண்டவா
தீண்டாமையை ஒழிக்கவா
தேனாய் தித்திக்கவா

மறு பிறவி உனக்கிருந்தால்
நீ நீயாகவே மீண்டுவா
எனை மீட்டவா
காலம் விரைவாக
விறைந்திடுதே
காற்றாய் நீயும்
பறந்துவா
இருவரும் இணைந்து
காவியங்கள் பல
படைத்திடுவோம்
காதல்தனை போற்றிடுவோம்.

Tuesday, November 07, 2006

நானும் நீயும்.



அன்று நான் நானாகவும்
நீ நீயாகவும்
இருந்தோம்!

இன்று நீ, நானாகவும்
நான் நீயாகவும்
மாறினோம்!

ஒன்றும் ஒன்றும்
சேர்ந்து
ஒன்றானோம்!

நாளை
நானும் நீயும்
இணைந்து
நாங்களாவோம்!

ஒன்றையும் ஒன்றையும்
ஒன்றாக்கி
பலராவோம்!

Labels:

Saturday, November 04, 2006

உலகமே நீ தான்.


தாய் மடி இருக்கும் வரை
தலையணை கடினமானது!

தந்தை உழைப்பு இருக்கும் வரை
பிள்ளைகள் சீமான்கள்!

வாலிபம் இருக்கும் வரை
ஆண்கள் வீரமானவர்கள்!

இளமை இருக்குவரை
பெண்கள் அழகானவர்கள்!

மழலை மொழி பேசும்வரை
அனைவரும் குழந்தைகள்!

தூய அன்பு இருக்குவரை
காதல் புனிதமானவை!

என்னோடு நீயிருக்கும்வரை
உலகமே நீ என்றானது.

Labels:

Wednesday, November 01, 2006

காத்திருக்கின்றேன் மீண்டும் மரணிக்க....




எல்லோருக்கும் பிறவி
என்பது ஓர் முறை தான்
ஆனால் எனக்கோ
இரு முறை அல்லவோ!

உன்னைப் பார்த்த முதல் நாள்
நான் மீண்டும் பிறந்தேன்
புது பூமி புது வானம்
அனைத்தும் எனக்கு புதியவை ஆனாது

நீ மாத்திரம்
எனக்கு
ஆதிமுதல் கொண்ட
நேசமானாய்!

ஆனாலும் இன்று
என் வாக்கு மீறி
பாதிவழியில் பரிதவிக்க விட்டு
நீயும் சென்றாய்!

இன்று முதல் முறையாக
நானும் தான் இறக்கின்றேன்!
காத்திருக்கின்றேன்.....
மீண்டும் ஓர் முறை
மரணிக்க!

Monday, October 30, 2006

நீதானா நீதானா!!!!




நீயா இன்று எனை
விட்டுச் சென்றாய்?

அன்று சூரிய உதயமும்
நிலவின் அடியெடுப்பும்
எம் உறவில் தானே
ஆரம்பம்!

இரவும் பகலும்
இணைவது எம்
உறவால் தானே
கண்மணியே!

கடிகார முள் கூட
நகராமல் இருந்திருக்கும்
காதலியே உனை நினையாமல்
நானிருந்ததில்யே!

இன்று சூரியகிரகனம்
சந்திரகிரகனம்
ஒன்றாய் வந்தது
என் வானில்!

இதற்கு என்ன கிரகனம்
என்று சொல்லியழைக்க?
பெயர் தெரியாததால்
வைத்தேன் என் பெயரை!


உ(எ)ன்னால் எனக்கிங்கே
இன்னல்கள் பல
சத்தியம் மீறியதால் வந்ததா?
இல்லை விதி தானோ இவை
எல்லாம்!


நீயா இன்று என்னை
விட்டுச் சென்றாய்?

Labels: