நானும் நீயும்.
அன்று நான் நானாகவும்
நீ நீயாகவும்
இருந்தோம்!
இன்று நீ, நானாகவும்
நான் நீயாகவும்
மாறினோம்!
ஒன்றும் ஒன்றும்
சேர்ந்து
ஒன்றானோம்!
நாளை
நானும் நீயும்
இணைந்து
நாங்களாவோம்!
ஒன்றையும் ஒன்றையும்
ஒன்றாக்கி
பலராவோம்!Labels: 1
உலகமே நீ தான்.
தாய் மடி இருக்கும் வரைதலையணை கடினமானது!தந்தை உழைப்பு இருக்கும் வரைபிள்ளைகள் சீமான்கள்!வாலிபம் இருக்கும் வரை
ஆண்கள் வீரமானவர்கள்!
இளமை இருக்குவரை
பெண்கள் அழகானவர்கள்!
மழலை மொழி பேசும்வரை
அனைவரும் குழந்தைகள்!
தூய அன்பு இருக்குவரை
காதல் புனிதமானவை!
என்னோடு நீயிருக்கும்வரை
உலகமே நீ என்றானது.Labels: 1
காத்திருக்கின்றேன் மீண்டும் மரணிக்க....
எல்லோருக்கும் பிறவி
என்பது ஓர் முறை தான்
ஆனால் எனக்கோ
இரு முறை அல்லவோ!
உன்னைப் பார்த்த முதல் நாள்
நான் மீண்டும் பிறந்தேன்
புது பூமி புது வானம்
அனைத்தும் எனக்கு புதியவை ஆனாது
நீ மாத்திரம்
எனக்கு
ஆதிமுதல் கொண்ட
நேசமானாய்!
ஆனாலும் இன்று
என் வாக்கு மீறி
பாதிவழியில் பரிதவிக்க விட்டு
நீயும் சென்றாய்!
இன்று முதல் முறையாக
நானும் தான் இறக்கின்றேன்!
காத்திருக்கின்றேன்.....
மீண்டும் ஓர் முறை
மரணிக்க!