தமிழ்த் தாயே......
உன் மடியில் நான் அமர
ஏட்டுக் கல்வியை
கற்பித்'தாயே'
உயிரும் மெய்யும்
விளங்கிட செய்'தாயே'
எழுவாய் பயனிலை
எது என்று எமக்கு
உணர்வித்'தாயே'
வல்லினம் மெல்லினம்
இடையினம் என்று
எம் நாவில் அமர்ந்'தாயே'
அகர முதல தொட்டு
ஆத்தி சூடி வரை
அறிய வைத்'தாயே'
முத்தமிழ்
முக்கனியைக் காட்டிலும்
இனிமையானதென
சுவைத்தவர் நாவாலே
சுவையுடன் சொல்ல வைத்'தாயே'
அகத்தியர் முதல் அடியேன் வரை
உன் அன்பை பெறச் செய்'தாயே'
நின் பாதங்களுக்கு தினமும்
ஒரு தடவையாவது
பூஜிக்க
வரம் ஒன்று தருவாயா தாயே
அன்னியர்கள் உன் மீது
காதல் கொள்ள
உன் பிள்ளைகளோ......
பின்மாறிப் போகின்றார்கள்
என்றாவது ஓர் நாள்
தாய் அருமை தெரிந்து
கதறி அழுவார்கள்.
அப்போதோ
காலம் கடந்து நிற்கும்.
அன்னையின் மைந்தர்களே!
மனம் திரும்புங்கள்
தாயையும், சேயையும்
பிரித்த பாவத்தினை
தேடிக் கொள்ளாதீர்கள்
நாளை உன் பெயர் சொல்லும் சந்ததியினர்
புதிய ஓர் உலகம் அமைத்து
இயந்திர மயமாக வாழ்வதற்கு
நீயே
வழி வகுத்துக் கொடுத்து விடாதே!
www.nilafm.com
7 Comments:
நன்றாக எளிமையாக இருக்கின்றது இந்தக் கவிதை.
தமிழ்மண விதிகளின் படி பின்னூட்ட மட்டுறுத்தல் போட வேண்டுமே. இன்னும் போடவில்லையா?
தமிழ்மண விதிகளின் படி பின்னூட்ட மட்டுறுத்தல் போட வேண்டுமே. இன்னும் போடவில்லையா?
அப்படி என்றால் என்ன?
உறுப்பினர் மாத்திரம் தான் பின்னூட்டம் செய்யும் படி மாற்றிட வேண்டுமா?
தெரிந்தவர்கள் தெரியப் படுத்துங்கள்.
அகத்தியர் முதல் நித்தியா வரை
மொழியும் தமிழை புரிந்து கொள்ள
வைத்"தாயே"
அருமை கவிதை
நேசமுடன்
-நித்தியா
" அன்னியர்கள் உன் மீது
காதல் கொள்ள
உன் பிள்ளைகளோ......
பின்மாறிப் போகின்றார்கள் "
சுடும் உண்மை ! சுட்டும் உமது கவிகள் தொடரட்டும் !
நன்றி குமரன்,நித்தியா,பிரகாஸ் உங்கள் வருகைக்கும் பதிவுகளுக்கும்.
உங்கள் படைப்புகள் அருமையாக இருக்கின்றது. வாழ்த்துக்கள் றெனிநிமல். தொடரட்டும் உங்கள் படைப்புகள்.
Post a Comment
<< Home