***உன் முகவரி தேடி...***
இது என்ன கொடுமை!
என்னை நானே சந்திக்க
உன்னிடம் ஏன்
முன் அனுமதி பெற வேண்டும்?
நீ வேறு நான் வேறு என்று
யார் உனக்கு சொன்னது?
ஆதவன் வருகைக்காக அல்லி
அல்லவா காத்திருக்கும்
இது தானே இயற்கை
இங்கே அல்லியின் வருகைக்காக
ஆதவன் அல்லவா
காத்துத் தவம் கிடக்கின்றான்!
முழு மதியே!
நீயும் ஒரு முறை
உன் முகம் தனைக் காட்டி
என் வீட்டில்
உன் பாதங்களை பதித்துச் செல்வாயா?
உன் பாதச் சுவட்டில்
படுத்துறங்கி விட எனக்கும் ஆசைதான்!
www.nilafm.com
4 Comments:
றெனிநிமல்,
கவிதையும் படங்களும் அருமை.
தமிழர் திருநாளாம் விவசாயிகளின் நன்றித் திருநாளான பொங்கல் நாளில்..உங்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துகள்.
உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மகிழ்ச்சியும்,அன்பும் மற்றும் எல்லா வளங்களும் பொங்கல் போல் என்றும்
பொங்கட்டும்.
அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா.
உங்கள் வருகைக்கு நன்றி பலூன் மாமா.
தேடு உன் இதயம் தொலைந்த
முகவரி தேடு..
ஆனால் உன் முகவரியைத்
தொலைத்து விடாதே..
முதலில் நீ தேடும் முகவரி -உன்
முகவரிக்குள் உண்டா என்று பார்..
இல்லை என்றால்..
உன் முகவரி இட்டு, உன்னிடம்
உள்ள முகவரிக்கு தகவல் கொடு
முகவரி தேடுவதாக..
ஏதாவது ஒரு முகவரி -உன்
முகவரி இட்டு
உன் முகவரிக்கு பதில் போடும்..
தான் தான் உன் முகவரி என்று
அப்போது புரியும் உன் சொந்த முகவரி
ஆனால்..
மறந்துவிடாதே - உன் முகவரிக்குள்
இன்னும் பல முகவரிகள் இருப்பதை..
இப்படிக்கு ஒரு முகவரி :-)
நன்றி விந்தியா.
Post a Comment
<< Home