அவளில் என் அவள் இல்லை!
சில நாட்களாகவே
நான் நானாகவே இல்லையே
இது போல் எப்போதும்
ஆனதில்லையே நான்!
வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையில்
இரசாயன மாற்றம் நிகழ்கின்றதே...?
தாய் மொழி மறந்து
அவள் மொழி அல்லவோ
பேசித் திரிகின்றேன்.
என்னுள்ளும் காதல் மலர்ந்து விட்டதோ?
எப்போது நீ எனக்குள்
வந்தாய் நானே அறியாமல்
கனவுகளில்
உன்னோடு இணைந்து விட்டேன்
உனக்குப்பட்டப்
பெயர்,செல்லப் பெயர் சூட்டி
அழகும் பார்த்து விட்டேன்
உன் நினைவுகளில்
பிரசிவித்த குழந்தைகள்தான் எத்தனை...?
ஓ.....
உன்னில் தான் எத்தனை மாற்றங்கள்......
இன்று உன் அன்பைக் கேட்டால்,
ஆளுக்கு பாதியென்று
பாகப் பிரிவினை செய்கின்றாய்
என் அன்பையா சந்தேகம் கொள்கிறாய்...?
என்னிடம் எப்படித்தான்
உன்னால் இப்படிபேச முடிகின்றது....?
உன்னில்
புரியாத புதிர்களில் இதுவும் ஒன்று!
இப்போது
என் மன சிறையில் இருந்து
விடுதலை கேட்டு
ஆர்ப்பாட்டம் செய்கின்றாய்
மீண்டும்,மீண்டும்
என் மன சிறையில்
இருந்துவிடுதலை கேட்டு நிற்கின்றாய்
தனிமையான இரவிலே
உருவாகும் உன் நினைவுகள்
எப்போதும் வளர்பிறை தானே..!
என் மனச்சிறையில்
உனக்குஆயுள் சிறை வாசம் தானே..?
உன்னிடம் நான் கொண்ட அன்பு
என்றுமே மாறாதடி
நீ என்னை மறந்திட்ட போதும்
என் விழிகளில் ஒளியில்லை
அவளில் என் அவள் இல்லை
துடிக்கும் உன் நெஞ்சில்
நான் இல்லை என்று
சத்தியம் செய்வாயா?
www.nilafm.com
4 Comments:
எனக்காக நீ என்றாய்
உனக்காக நான் என்றேன்
பூலோகம் தேய்வதைப்போல்
சுற்றி வந்தோம் - சுகமாக
இருந்தது..
இன்று..
மறந்துவிடச் சொல்கிறாய்
விந்தையாக உள்ளது..
நீ
சுவாசிக்க மறந்தபின் - நான்
தான் உன்னை மறப்பதேப்படி??
-by someone
இன்னும் வரிகளில் யதார்த்தம் கூட்டலாம்... கவிதை இன்னும் ருசிக்கும்... வளர்க...
றெனி எப்படி இருக்கீங்க.
கவிதை நன்றாக உள்ளது, தொடர்ந்து எழுதுங்கள்.
இங்கே வருகை தந்த நித்தியா, தேவ்,பரஞ்சோதி அனைவருக்கும் எனது நன்றிகள்.
Post a Comment
<< Home