காத்திருக்கின்றேன்.
அன்று ஒரு நாள்
ஆற்றங்கரைதனில்
இலைமறை காயாக கண்டேன் அவளை!
ஈர்த்து விட்டாள் என்னையவள்
உண்மை ஒன்று சொல்லவா
ஊருக்குள் அழகி அவள் மட்டும் தான்
எண்ணில் அடங்கா ஆசைகள்
ஏக்கத்தில் இங்கே தவிப்புக்கள்
ஐயெட்டு வயதை கடந்தவளே
ஒரு வார்த்தை சொல்ல மாட்டாயா
ஓடமாய் ஓடுகின்றேன் வழிகளின்றி
ஓளடதமாய் இருப்பாயா என் நோயிக்கு
அஃதே வருவாய் என்று காத்திருக்கின்றேன்.
1 Comments:
பால் மழைக்குக் காத்திருக்கும்
பூமியல்லவா? - ஒரு
பண்டிகைக்குக் காத்திருக்கும்
சாமியல்லவா?
வார்த்தை வரக்காத்திருக்கும்
கவிஞனல்லவா?
நான் காத்திருக்கக் காதலேன்னும்
கூடுமல்லவா?
:-)
Post a Comment
<< Home